எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர முடியாது...
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடும் விமர்சனம்...
கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவதூறு வழக்கு...
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்திய குற்றவியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது விசாரணை நடைபெற்றது. 2021 ஜூன் மாதம் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா அறிவித்திருந்தார்.
குற்றவாளி என தீர்ப்பு....
இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்டோர் சூரத் தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜராகினர். அனைத்துத் தரப்பினரும் ஆஜரான நிலையில் தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட் வர்மா, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பளித்தார்.
கடமையை மட்டுமே...
தொடர்ந்து மனுதாரர் புர்னேஷ் மோடி தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “சட்டங்களை இயற்றும் மக்களவையின் எம்.பி.யாக ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு சட்ட விதிகள் அனைத்தும் தெரியும். அவரே விதிகளை மீறியுள்ளார். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்றார். ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “வழக்கில் மன்னிப்பு கோர விரும்பவில்லை. ராகுல் காந்தி ஊழலுக்கு எதிராகவே பேசினார். அவர் தனது கடமையை மட்டுமே செய்தார்” என்றனர்.
30 நாட்கள் ஜாமீன்....
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்தார். இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார்.
மேல்முறையீடு...
ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பாபு கூறும்போது, “இந்த தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நீதித் துறையின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், “எனது மதம் உண்மை, அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. உண்மையே எனது கடவுள். அகிம்சை அதை அடையும் வழி. இது காந்தியடிகளின் பொன் மொழி” என்று தெரிவித்திருந்தார்.
எம்.பி. பதவி பறிப்பு...
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களவை செயலாளர் உத்பல் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ''குற்றவியல் வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 102(1)(e)-ன் கீழ் கேரளாவின் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் எனும் நிலையில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுகிறார். அவரது தகுதி நீக்கம் தீர்ப்பு வெளியான நாளில் (23.03.2023) இருந்தே அமலுக்கு வந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி தப்புமா..?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிபோயுள்ளது. சூரத் நீதிமன்றம் அவருக்கு விதித்த தண்டனையை ஒரு மாதத்துக்கு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவரது தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் முடிவைப் பொறுத்தே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நிரந்தரமாக பறிபோகுமா அல்லது தப்புமா என்பது தெரியவரும்.
போட்டியிட முடியாது...
இந்த விவகாரம் குறித்து சட்ட நிபுணர்கள் கூறும்போது, "ராகுல் வழக்கில், அவர் சுப்ரீம் கோர்ட் வரை மேல்முறையீடு செய்ய முடியும். ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டும் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், கண்டிப்பாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அவர் விடுதலையான நாள் முதல் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது" என்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்
10 Mar 2026வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்
-
ஈரான் போர் குறித்து ட்ரம்ப் - புதின் ஆலோசனை
10 Mar 2026மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை: மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Mar 2026சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
10 Mar 2026திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
-
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட
-
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
10 Mar 2026கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை
10 Mar 2026லாகூர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ.
10 Mar 2026மும்பை, ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
போர் விரைவில் முடிவுக்கு வரும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிவு
10 Mar 2026நியூயார்க், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது.
-
தமிழகத்தில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அச்சம்: மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி. கோரிக்கை
10 Mar 2026சென்னை, வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வரும் 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகிறேன்: செந்தில் பாலாஜி
10 Mar 2026கரூர், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொர்பாக வருகின்ற மார்ச் 17 அன்று சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தமிழக முன்னாள
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு: 60 பேரிடம் விஜய் நேர்காணல்
10 Mar 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 60 பேரிம் விஜய் நேற்று நேர்காணல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 13-ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிற
-
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
10 Mar 2026மும்பை, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்டன.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரம்.
- திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.


