முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள பாதித்த 4 மாவட்டங்களில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-2 2023-12-04

சென்னை, தமிழகத்தில் மிக்ஜம் புயலாம் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

'மிக்ஜம்' புயல் தமிழக வடமாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் அதிகனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். கனமழையால் பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் தனது தரப்பில் நிவாரண உதவிகளை செய்யவுள்ளது.

இந்த நிலையில், மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராஜ்நாத் சிங்குடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர். ஆய்வுக்கு பின்னர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து