முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

புதன்கிழமை, 17 ஏப்ரல் 2024      இந்தியா
AAP 2024-04-17

Source: provided

புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக  உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்று துவக்கி உள்ளது. 

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் நேற்று ராம நவமியை முன்னிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக  உங்கள் ராம ராஜ்ஜியம் (https://aapkaramrajya.com/) என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. 

இந்த இணையதளத்தில் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் சஞ்சய் சிங், அதிஷி, சவுரப் பரத்வாஜ், ஜாஸ்மின் ஷா ஆகியோர் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசினர்.

கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் டெல்லியில் மூன்று முறை ஆம் ஆத்மி அரசை அமைத்துள்ளோம் என்பது மட்டுமல்ல, பஞ்சாபிலும் மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம். 

கெஜ்ரிவால் தலைமையில் டெல்லியிலும், பகவந்த் மான் தலைமையில் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. நாங்கள் செய்துள்ள பணிகளை மக்களுக்கு தெரிவிக்கவும், ராம ராஜ்ஜியத்தை அமைக்க வேண்டும் என்ற எங்கள் கனவின் உறுதியை வெளிப்படுத்தவும் இந்த இணையதளத்தைத் தொடங்கி உள்ளோம்.

ராம ராஜ்ஜியம் குறித்த எங்கள் கனவை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த இணையதளத்தை அவசியம் காண வேண்டும். டெல்லியிலும், பஞ்சாபிலும் நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதன் பிறகு நீங்கள் எங்களோடு இணையலாம் என சஞ்சய் சிங் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து டெல்லி அமைச்சர்அதிஷி பேசுகையில்,

ராம சரிதம் தந்த உந்துதல் காரணமாகவே டெல்லி மற்றும் பஞ்சாப் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தனது அரசு கடந்த 9 ஆண்டுகளாக பாடுபட்டு கொண்டிருக்கிறது என கெஜ்ரிவால் கூறி இருக்கிறார். 

ராம ராஜ்ஜியம் குறித்த நிறைவை மக்கள் பெறுவதற்காக ராமர் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 14 ஆண்டுகள் வனத்துக்கு சென்றார். ஆனாலும், அவர் தனது வாக்குறுதியை மீறவில்லை. கெஜ்ரிவாலும் அதே கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறார் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து