எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
மிக இளம் வயதில்...
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் குகேஷ் எட்டியுள்ளார்.
அமெரிக்க வீரரை...
14-வது சுற்று ஆட்டத்தில் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார். இது குகேஷிற்கு சாதகமாக மாற, கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வயது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
9 புள்ளிகளுடன்...
14 சுற்றுகளின் முடிவில் குகேஷ் 9 புள்ளிகளையும், நகமுரா 8.5 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் சீனாவைச் சேர்ந்த டிங் லிரென எதிர்கொள்ள இருக்கிறார். அதோடு, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் குகேஷ் தனதாக்கியுள்ளார். அவருக்கு விஸ்வநாதன் ஆனந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் - முதல்வர் பாராட்டு
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "குகேஷின் சாதனை, அவரது அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. குகேஷின் வெற்றியால் இந்தியாவே பெருமை கொள்கிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது., "17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துகள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


