முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2024      இந்தியா
Tamil-Nadu-Farmers-2024-04-

புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய விளை பொருள்களுக்கு லாபகராமான விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெறும் இந்தக் காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.

மத்திய அரசு விவசாய விளைபொருள்களின் விலையை இருமடங்காக உயர்த்த வேண்டும், விவசாயிகளின் அனைத்துக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்,  காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்,  மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் ஒரு வார காலத்திற்கு இப்போராட்டத்தை நடத்த  விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை திடீரென பெண்கள் உள்பட சில விவசாயிகள் செல்போன் டவர் மீதும்,  மரத்தின் மீதும் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக செல்போன் டவர் மீதும்,  மரத்தின் மீதும் ஏறிய டெல்லி காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படை வீரர்கள் விவசாயிகளை வலுகட்டாயமாக கீழே இறக்கினர். மேலும்,  பல்வேறு வகையில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதால்,  துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  விவசாயிகளின் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து