முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி 2-ம் கட்டமாக ஆலோசனை

புதன்கிழமை, 24 ஜூலை 2024      அரசியல்
EPS 2023-10-17

சென்னை, பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து சென்னையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2-ம் கட்டமாக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் வாரியாக கடந்த 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை முதல்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இதுவரையில் 7 நாட்கள் நடந்த கலந்துரையாடலில் 23 தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.  

இந்த நிலையில் 2-வது கட்ட கலந்துரையாடல் நேற்று நடந்தது. மீத முள்ள 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை நேற்று முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை சந்தித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். நேற்று காலையில் தேனி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி கருத்துக்களை கேட்டறிந்தார். சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், இந்நாள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.  

முன்னதாக ஆலோசனை நடத்துவதற்காக தலைமை அலுவலகத்திற்கு காலை 10.15 மணிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை  தொண்டர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். நேற்று மாலை 4 மணிக்கு ஆரணி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இன்று தென்காசி, ஈரோடு ஆகிய தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து