முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்டில் அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சர்களாக 11 பேர் பதவியேற்பு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2024      இந்தியா
Jharkhand-CM-Hemant-Soren-2

ராஞ்சி, ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 தொகுதிகளை இக்கூட்டணி கைப்பற்றியது. பா.ஜ.க. 21 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து  நவம்பர் 28-ம் தேதி ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சுதிவ்ய குமார், தீபக் பிருவா, ராம்தாஸ் சோரன், சாம்ரா லிண்டா, யோகேந்திர பிரசாத், ஹபிஜுல் ஹசன் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபிகா பாண்டே சிங், ஷில்பி நேஹா டிர்கி, இர்பான் அன்சாரி, ராதாகிருஷ்ண கிஷோர் ஆகிய 4 பேரும், ராஷ்டிர ஜனதா தளத்தைச் சேர்ந்த சஞ்சய் பிரசாத் யாதவும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ராஜ்பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் சந்தோஷ் கங்க்வார் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த் சோரன், 

காலம் வேகமாகச் செல்வதால், எல்லாம் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் திசை தற்போது முடிவாகி இருக்கிறது. நாங்கள் வேகமாக முன்னேறுவோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து