எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
திருவனந்தபுரம் : நகர்ப்புற பகுதிகள் மிகுந்த கேரளா மாநிலத்தில், மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில் போக்குவரத்து வசதி தேவையில்லை என்று மெட்ரோமேன் ஸ்ரீதரன் பரிந்துரைத்துள்ளார்.
டில்லி மெட்ரோ திட்டத்தின் மூளையாக செயல்பட்டவர் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன். கேரளாவைச் சேர்ந்த அவர் கேரளா முதல்வருக்கு அனுப்பியுள்ள பரிந்துரை விபரம்: தொடர்ச்சியான நகர்ப்புற குடியிருப்புகளை கொண்டுள்ள கேரளாவுக்கு, மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்கள் தேவையில்லை. மாநிலத்தின் புவியியல் அமைப்புக்குத் தகுந்தபடி மணிக்கு அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரயில்களை போதுமானவை. சராசரியாக மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் சென்றால் கூட, திருவனந்தபுரத்திலிருந்து கண்ணனூர் வரையிலான 430 கிலோமீட்டர் தூரத்தை, 3.15 மணி நேரத்தில் கடந்து விட முடியும். இவ்வாறு அவர் பரிந்துரை செய்துள்ளார்.
இத்தகைய செமி ஹைஸ்பீடு ரயில் திட்டத்தை கேரளாவில் நிறைவேற்ற ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இதில் 51% இந்திய ரயில்வே துறையும், 49 சதவீதம் கேரளா அரசும் பங்கு வைத்திருக்கும். மொத்த செலவில் 30 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படும். 40,000 கோடி ரூபாய் கடன் மூலமாக திரட்டப்படும்.
இந்த ரயில் திட்டத்தை எதிர்காலத்தில் சென்னை- பெங்களூரு - கோவை அதிவேக ரயில் வழித்தடத்துடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீதரன் கூறுகையில், ''அதிவேக ரயில் போக்குவரத்து என்பது, குறைந்தபட்ச நிறுத்தங்கள் உள்ள வழித்தடம் மட்டுமே சாத்தியமாகும்.
கேரளா போன்ற மக்கள் அடர்த்தி மிகுந்த மாநிலங்களில், 25 முதல் 30 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு நிறுத்தம் தேவைப்படும். கொங்கன் ரயில்வே வழித்தடம் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கும் வகையில் தயார் செய்யப்பட்டது. ஆனால் அந்த வேகத்தில் ரயில்களை இயக்க முடிவதில்லை என்பதுதான் உண்மை,'' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025