முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு கொலை மிரட்டல் வந்தது: வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
Varun-Chakravarthy-2025-02-

Source: provided

மும்பை : 2021 டி20 உலகக் கோப்பை தோல்வியால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

சிறப்பான பந்து வீச்சு...

இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை சமீபத்தில் வென்றது. அதில் தமிழக வீரர் வருண் சக்கரவத்தி சிறப்பாக பங்காற்றினார். 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் வருண் சக்கரவத்தி. அவரது சுழலால் பலரையும் திணறடித்தார். குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.

உலகக் கோப்பை தோல்வி...

2021 டி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குரூப் ஸ்டேஜ் போட்டிகளோடு வெளியேறியது. 5 போட்டிகளில் 3இல் மட்டுமே வென்றது. அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்தத் தொடரில் ஆஸி. அணி நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது.

பாதிக்கப்பட்டேன்...

இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:  2021 டி20 உலகக் கோப்பை எனக்கு மிகவும் கடுமையான நாள்கள். அப்போது கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் அணிக்கு வந்தேன். ஆனல, ஒரு விக்கெட் கூட எடுக்காததால் அடுத்த மூன்றாண்டுக்கு என்னை அணியில் எடுக்கக்கூட தயங்கினார்கள்.

கொலை மிரட்டல்கள்... 

உலகக் கோப்பை முடிந்ததும் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இந்தியா வந்தால் உயிருடன் இருக்க மாட்டாய் என மிரட்டல் விடுவித்தவர்கள் தெரிவித்தார்கள். என்னுடைய வீட்டையும் கண்டறிந்தார்கள். விமான நிலையத்திலிருந்து சிலர் என்னை பைக்கில் பின் தொடர்ந்தனர். ரசிகர்கள் உணர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து