முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      இந்தியா
Jail

Source: provided

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிஜப்பூர் மாவட்டத்தின் டெக்மெட்லா கிராமத்திலுள்ள வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் துறையின் கோப்ரா பிரிவினரும், அம்மாநில காவல் துறையினரும் இணைந்து கடந்த ஏப்.15 மேற்கொண்ட சோதனையில் 7 நக்சல்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையின் மற்றொரு குழு மேற்கொண்ட நடவடிக்கையில் பெல்சார் கிராமத்திலுள்ள கோட்டைகளிலிருந்து 6 நக்சல்களும், கண்டாகர்கா கிராமத்திலிருந்து 9 நக்சல்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நக்சல்களிடமிருந்து சாப்பாட்டு டப்பாக்களில் செய்யப்பட்ட குண்டுகள், மாவோயிஸ்ட் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நக்சல்கள் அனைவரும் 19 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து