முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. புதிய ஒப்பந்த பட்டியல்: 'ஏ பிளஸ்' கிரேடில் ரோகித், கோலி

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2025      விளையாட்டு
17-Ram-51

Source: provided

மும்பை: பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் புதிய ஒப்பந்த பட்டியலில் ரோகித், கோலி, பும்ரா 'ஏ பிளஸ்' கிரேடில் நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய பட்டியல்... 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆண்டு தோறும் வீரர்களின் ஒப்பந்த முறையை மாற்றி அமைத்து அறிவித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி ஒப்பந்தங்களை அறிவித்தது. ஆனால் இந்த முறை தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஒப்பந்தம் தொடர்பாக வீரர்களை பி.சி.சி.ஐ. இறுதி செய்து விட்டதாகவும் இந்த வாரம் இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது. 2025-26ம் ஆண்டு பி.சி.சி.ஐ.யின் வீரர்கள் ஒப்பந்த விவரம் 1, 2 நாட்களாகவும் வெளியிடப்படும் என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

'ஏ' பிளஸ் கிரேடில்... 

ரோகித் சர்மா, வீராட் கோலி, பும்ரா ஆகியோர் 'ஏ' பிளஸ் கிரேடில் இருக்கிறார்கள். அவர்கள் அதே நிலையில் இருப்பார்கள் என்று தெரிகிறது. 20 ஓவர், டெஸ்ட், ஒருநாள் போட்டி ஆகிய 3 வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு ஏ பிளஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதில் ஜடேஜாவை தவிர மற்ற 3 வீரர்களும் ஏற்கனவே இருப்பது போல 'ஏ பிளஸ்' ஒப்பந்தத்தில் இருப்பார்கள்.

ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஏ...

உள்ளூர் போட்டியில் ஆட மறுத்ததால் ஸ்ரேயாஸ் அய்யர், இஷான்கிஷன் ஆகியோர் கடந்த ஆண்டு ஒப்பந்தபட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் தற்போது மிகவும் சிறப்பான நிலையில் உள்ளார். இதனால் அவர் கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் இடம்பெறுகிறார். அவர் 'ஏ' கிரேடில் இடம்பெறுகிறார்.

இஷான்கிஷன் நிலை என்ன?

இஷான்கிஷன் பி.சி.சி.ஐ. ஒப்பந்த பட்டியலில் இடம் பெறுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் உள்ளூர் போட்டியில் அவரது ஆட்டம் எதிர்ப்பார்த்த அளவுக்கு சிறப்பாக அமையவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து