முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட பஸ் நிலையம் இன்று திறப்பு

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று (மே 2) திறக்கப்படுகிறது.

புதுவை மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறைபாட்டால் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பணிகள் முடிவடைந்தது. ஆனால் திறப்பு விழாவுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு தேதியாக கூறப்பட்டு வந்தது. இதனால் பேருந்து நிலைய பணிகள் முடிவடைந்தும் ஏன் திறக்கவில்லை? என மக்களிடையே அதிருப்தி எழுந்தது.

இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆளுநர்- முதல்வர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலைய திறப்பு விழா இன்று (மே 2) காலை 9.40 மணிக்கு நடக்கிறது. ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கின்றனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து