முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ-பாஸ் சர்வரில் சிக்கல்: நீலகிரி சுற்றுலா பயணிகள் அவதி

வியாழக்கிழமை, 1 மே 2025      தமிழகம்
Nilgiri

Source: provided

நீலகிரி: இ-பாஸ் சர்வரில்  திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களையும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள சூழலில், நீலகிரிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இ-பாஸ் சர்வரில் நேற்று திடீரென சிக்கல் ஏற்பட்டதால், ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் பலர் இ-பாஸ் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர்.

இதனால் ஊட்டி-கூடலூர் நெடுஞ்சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து சர்வரில் ஏற்பட்ட சிக்கல் சரிசெய்யப்பட்டு, இ-பாஸ் எடுத்த சுற்றுலா பயணிகள் மேற்கொண்டு செல்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து