முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      உலகம்
Dengue-fever 2023 06 20

Source: provided

பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சள் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இது ஏடிஸ் மற்றும் ஹேமகோகஸ் வகை கொசுக்களால் பரவும் ஒருவகை வைரஸ் நோய் ஆகும். இதுவரை இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 74 பேரில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் அங்குள்ள டோலிமா பிராந்தியத்தில் 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மஞ்சள் காய்ச்சலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டில் இந்த சமயத்தில் பல கொலம்பியர்கள் வெப்பமான பகுதிகளுக்குச் செல்கிறார்கள். அங்கு நோயைப் பரப்பும் கொசுக்கள் அதிகமாக உள்ளன.

அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கில்லர்மோ அல்போன்சோ ஜராமில்லோ கூறினார். இலவசமாக வழங்கப்படும் இந்த தடுப்பூசியைப் மக்கள் செலுத்திக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து