எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதுகளையும் அவர் வழங்கினார்.
வேளாண்மைத் துறைக்கு சிறப்பிடம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, விவசாயப் பெருமக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதோடு, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டு, வேளாண் பெருமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம், பயிர் காப்பீட்டுத் திட்டம் போன்ற பல்வேறு சீரிய திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி, சுற்றுச்சுழல் மற்றும் பொதுநலன் கருதி இயற்கை வேளாண்மையை ஊக்குவித்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தோட்டக்கலைப் பயிர்களில் உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்க இடுபொருள் மானியம், இயற்கை வேளாண் இடுபொருட்களை உற்பத்தி செய்யும் அலகுகள் அமைத்திட குழுக்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் மானியம், நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மைக்கான சிறப்புத் திட்டம், வட்டாரத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 385 வட்டாரங்களில் உயிர்ம வேளாண்மைக்கான செயல்விளக்கத்திடல்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இவை தவிர இயற்கை வேளாண் முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த ஏதுவாக பூமாலை வணிக வளாகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களில் வசதிகள் ஏற்படுத்தித் தருதல், இயற்கை வேளாண்மை மேற்கொள்ள ஊக்கத்தொகை வழங்குதல், இயற்கை வேளாண்மை சான்றிதழுக்கான பதிவுக்கட்டணத்திற்கு முழு விலக்கு அளித்தல், இயற்கை வேளாண்மைக்கான தேசிய இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் 2025-26ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை(மே.2) நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருதினையும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை-உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில், உயிர்ம வேளாண்மையில் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், உயிர்ம வேளாண்மையில் ஈடுபடும், ஊக்குவிக்கும் மற்றும் பிற உயிர்ம விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் பெருமளவில் கொண்டு சேர்த்த “நம்மாழ்வார்” அவர்களின் பெயரில் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அவ்வகையில் 2024-ஆம் ஆண்டு மூன்று விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, 2025-ம் ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த க.சம்பத்குமார் முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.10,000 மதிப்பிலான பதக்கமும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.ஜெகதீஸ் இரண்டாம் பரிசாக ரூ.1.50 லட்சம் பரிசுத் தொகை மற்றும் ரூ.7,000 மதிப்பிலான பதக்கமும், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வே.காளிதாஸ் மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்பிலான பதக்கமும் முதல்வர் வழங்கி சிறப்பித்தார்.
வேளாண்மை - உழவர் நலத்துறை சார்ந்த பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், அரசின் வேளாண் திட்டங்கள் கடைக்கோடி விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையிலும், காலியாகவுள்ள பணியிடங்கள் படிப்படியாக விரைந்து நிரப்பப்பட்டு வருகின்றன. அவ்வகையில் இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை வேளாண்மை-உழவர் நலத்துறையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக பல்வேறு வகையான தொழில்நுட்ப மற்றும் அமைச்சுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 1,799 நபர்களுக்கும், பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 265 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், என மொத்தம் 2,064 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் 76 இளநிலை உதவியாளர்கள், 68 தட்டச்சர்கள் மற்றும் 7 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் என மொத்தம் 151 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம்,வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் தித. ஆபிரகாம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பெ.குமாரவேல்பாண்டியன், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் இரா. முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-06-2025.
20 Jun 2025 -
பாஸ்போர்ட் பெற கணவரின் கையெழுத்து தேவையில்லை : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
20 Jun 2025சென்னை : பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் மனைவி, கணவரின் கையெழுத்தைப் பெறுவது அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
ஈரான் - இஸ்ரேல் மோதலில் அமெரிக்க தலையீடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ரஷ்யா
20 Jun 2025மாஸ்கோ : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் பதட்டங்களைத் தொடர்ந்து, மோதலில் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்
-
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா களமிறங்குமா? - அதிபர் ட்ரம்ப் விரைவில் முடிவு
20 Jun 2025வாஷிங்டன் : அடுத்த இரண்டு வாரங்களில் இஸ்ரேல் - ஈரான் மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ள
-
ரூ.1800 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: பீகாருக்கு இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறேன்: பிரதமர்
20 Jun 2025சிவான், ரூ.1800 கோடி மதிப்பில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
-
அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா
20 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று அனைத்து மாலை மாற்றுத்திறனாளிகள் பயன்தரத்தக்க வகையில் 60-க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்த முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ரேஷன் கடைகளில் ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு போதும் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
20 Jun 2025சென்னை : ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
திருமாவளவனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து
20 Jun 2025சென்னை : தேர்தல் பிரச்சாரத்தின் போது 4 நிமிடங்கள் கூடுதலாக பேசியதாக வி.சி.க.
-
ஈரான் எங்களிடம் எந்த ராணுவ உதவிகளையும் கேட்கவில்லை : பாகிஸ்தான் அரசு விளக்கம்
20 Jun 2025இஸ்லாமாபாத் : ஈரானுக்கு நாங்கள் முழு தார்மிக ஆதரவை வழங்குகிறோம்.
-
சிறுபான்மையினருக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறதா..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Jun 2025சென்னை : சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கடன் வழங்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 Jun 2025சென்னை, உயர்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
-
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் புது பைக்குகளுடன் 2 ஹெல்மெட் வழங்குவது கட்டாயம்: மத்திய அரசு
20 Jun 2025புதுடெல்லி, வரும் ஜனவரி முதல் புதிய இருசக்கர வாகனங்களுடன் 2 ஹெல்மெட் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ஏ.பி.எஸ்.
-
அடுத்த மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருகிறார் அமித்ஷா: இ.பி.எஸ்., ராமதாசை சந்திக்க திட்டம்
20 Jun 2025சென்னை, அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
-
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பணத்தை தராமல் இழுத்தடிப்பதா? - தமிழக அரசுக்கு த.வெ.க. கண்டனம்
20 Jun 2025சென்னை : ரூ.
-
திட்டங்களின் செயல்பாடு குறித்து நான்கு துறை அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
20 Jun 2025சென்னை, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம்
-
அரசு மருத்துவமனைகளில் பணி நீட்டிப்பு என்பதே கிடையாது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்
20 Jun 2025சென்னை : தி.மு.க. அரசின் லட்சியம் 60 வயது முடிவடைந்தால் அவர்களுக்கு பணிநீட்டிப்பு என்பதே கிடையாது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.;
-
போர் நிறுத்தத்தை நாங்கள்தான் கோரினோம்: முதல்முறை பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்
20 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இரண்டு விமானப் படைத் தளங்களை இந்தியா தாக்கியதை அடுத்தே போர் நிறுத்தத்தை கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் ஒ
-
தொழில்நுட்பக் கோளாறு: மதுரை சென்ற விமானம் சென்னையில் தரையிறக்கம்
20 Jun 2025சென்னை : தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மதுரை சென்ற விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
ஏழைகள் சமமாக நிற்பதை பா.ஜ. விரும்பவில்லை: ராகுல்
20 Jun 2025புதுடில்லி : ''ஏழைகள் கேள்வி கேட்பதையும், முன்னேறுவதையும், சமமாக நிற்பதையும் பா.ஜ., -ஆர்.எஸ்.எஸ்., விரும்பவில்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியு
-
போரை மாய்ப்போம்; மனிதம் காப்போம்: முதல்வர் பதிவு
20 Jun 2025சென்னை, பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
ஜனாதிபதி திரௌபதி முர்முக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
20 Jun 2025புதுடெல்லி : ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க திரெளபதி முர்மு பாடுபட்டுள்ளார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
20 Jun 2025சென்னை, ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பார்வைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
-
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
20 Jun 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் நக்சல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
-
மதுரை முருக பக்தர்கள் மாநாடு: வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்
20 Jun 2025மதுரை, முருக பக்தர்கள் மாநாட் டுக்கு வரும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
டெல்லியில் 27-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
20 Jun 2025புதுடெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் டெல்லியில் வருகிற 27-ந்தேதி கூடுகிறது.