முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரை நிறுத்த தயார்: அமெரிக்க அதிபரிடம் தெரிவித்த ரஷ்ய அதிபர்

புதன்கிழமை, 21 மே 2025      உலகம்
Trump-Putin 2024-11-11

Source: provided

மாஸ்கோ : உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் 2 மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இப்போரை நிறுத்த உக்ரைன், ரஷ்யா ஆகிய இரு தரப்புக்கும் அழுத்தம் கொடுத்து வருகிறார். என்றாலும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமர் புதினுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் 2 மணி நேரம் பேசினார். அப்போது ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததனர்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் புதின் கூறுகையில், “மூன்று ஆண்டு கால போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபரிடம் கூறியுள்ளோம். ஆனால் அமைதியை நோக்கிய எந்தவொரு முன்னேற்றத்துக்கும் விதிமுறைகளை நிர்ணயிப்பது அவசியம். ரஷ்யா உடனடியாக நிபந்தனையற்ற 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்க வேண்டும் என்று உக்ரைன், அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் அமெரிக்கா இணைந்து வலியுறுத்தியுள்ளன. பொருத்தமான ஒப்பந்தங்கள் எட்டப்பட்டால், போர்நிறுத்தம் நிச்சயமாக சாத்தியமாகும். பிரச்சினக்கான மூல காரணங்கள் அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து