முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்ஸ்மேன்களுக்கு தோனி அட்வைஸ்

புதன்கிழமை, 21 மே 2025      விளையாட்டு
Dhoni 2024-10-28

Source: provided

டெல்லியில் நடந்த 62வது லீக் ஆட்டத்தில் சி.எஸ்.கே, ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய சிஎஸ்கே 187 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது: நாங்கள் பேட்டிங்கில் நிர்ணயித்த இலக்கு ஒரு நல்ல ஸ்கோர் என நினைக்கின்றேன். ஏனென்றால் விக்கெட்டுகளை நாங்கள் அதிக அளவு இழந்ததால் கீழ் வரிசை வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. விக்கெட்டுகள் அதிகம் இழப்பதன் மூலம் 20 ஓவரும் முழுமையாக விளையாட முடியாத நிலை ஏற்படும். ஆனால் பிரவீஸ் அபாரமாக விளையாடி சரியான வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்த்தார்.

எங்கள் அணியின் ரன்ரேட்டும் நன்றாகத்தான் இருந்தது. பவர் பிளேவில் நாங்கள் அதிக அளவு விக்கெட்டுகளை இழந்தோம். கூடுதலாக விக்கெட் இழந்ததால் எங்களால் ரிஸ்க் எடுத்து விளையாட முடியவில்லை. பவர்பிளேவில் நாங்கள் தொடர்ந்து மோசமாக செயல்பட்டு வருகிறோம். முதல் ஆறு ஓவரில் இவ்வளவு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கக் கூடாது. பேட்ஸ்மேன்கள் தங்களுடைய திறமையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கன்சிஸ்டன்டுடன் விளையாட வேண்டும். உங்களால் சிக்சர்களை எந்த நிலையிலும் அடிக்க முடியும் .உங்களுக்கு நீங்களே அழுத்தத்தை செலுத்திக் கொள்ளாதீர்கள். சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். விளையாட்டை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் என்னுடைய அறிவுரையாக இளைஞர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

____________________________________________________________________

காலை தொட்டு வணங்கிய வைபவ் 

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 17.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் பெற்ற 4வது வெற்றி ஆகும்.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்து அசத்தினார். இந்நிலையில், போட்டி முடிந்து இரு அணி வீரர்களும் கைகுலுக்கும்போது தோனியின் காலை தொட்டு வைபவ் சூர்யவன்ஷி வணங்கினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

____________________________________________________________________

சி.எஸ்.கே பயிற்சியாளர் விளக்கம்

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இதுவரை 13 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி அதில் 3 வெற்றி, 10 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

உண்மையில் நாங்கள் புள்ளி பட்டியலில் கீழே இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. இது எங்களுக்கு உந்துதலை தரக்கூடியது கிடையாது. நாங்கள் நல்ல செயல் திறனை மட்டுமே வெளிப்படுத்த விரும்பினோம். சில செயல் திறன்களை ஒன்றிணைக்கவும் நினைத்தோம். ஆனால், எங்களால் செய்ய முடியாமல் போய்விட்டது. நாங்கள் விளையாடிய முறைக்கு நாங்கள் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்க தகுதியானவர்கள். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.

நாங்கள் எங்களுடைய பேட்டிங் ஆர்டரை மறுசீரமைக்க எப்பொழுதும் வேலை செய்து வருகிறோம். அடுத்த ஆண்டுக்கான வலுவான யோசனைகள் எங்களிடம் இருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு எங்களால் அதை செய்ய முடியாது. ஏனென்றால் எங்களுடைய டாப் ஆர்டரிடம் இருந்து ரன்கள் வரவில்லை.

நாங்கள் எவ்வளவு சிறப்பாக ஆரம்பத்தில் பேட்டிங்கை தொடங்குகிறோம் என்பதை பொறுத்து தான் அடுத்த யார் பேட்டிங் செய்ய வரவேண்டும்? என்பது தீர்மானிக்கப்படுகிறது. எங்களுக்கு நாங்கள் நினைத்தபடி மேலே இருந்து ரன்கள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் நல்ல இன்னிங்சை உருவாக்குவதற்கு பதிலாக சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

____________________________________________________________________

பேட்மிண்டன்: பி.வி. சிந்து தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிரியான்ஷு ராஜாவத் சிங்கபூர் வீரரான ஜேசன் டெஹ் ஜியா ஹெங் உடன் மோதினர். இந்த ஆட்டத்தில் ராஜாவத் 15-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் கிடாம்பி, பிரனோய், ஷெட்டி, கருணாகரன் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இதேபோல் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து, வியட்நாமின் நுயான் துய் லின் உடன் மோதினார். முதல் செட்டை வியட்நாம் வீராங்கனையும் 2-வது செட்டை சிந்துவும் வெற்றி பெற்றனர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை வியட்நாம் வீராங்கனை வென்றார். இதன்மூலம் 21-11, 14-21, 21-15 என்ற செட் கணக்கில் பிவி சிந்துவை வீழ்த்தி வியட்நாம் வீராங்கனை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.  

____________________________________________________________________

தோனி குறித்து சஞ்சய் பாங்கர் 

ஒரு போட்டித் தொடரில் ஒரு அணி 13 போட்டிகளில் 10 போட்டியில் தோற்கிறது என்றால் கேப்டன்சி, அணித் தேர்வு, வீரர்களின் கடப்பாடு, ஸ்பிரிட் என்று அனைத்தும் கேள்விக்குட்பட்டே தீரும். இதில் தோனி பாவம் அவர் என்ன செய்வார் என்று ஒருதலைபட்சமாக வக்காலத்து வாங்க முடியாது. அவருக்கு போதுமென்ற மனம் வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் சஞ்சய் பாங்கர். 

ஆகாஷ் சோப்ராவோ இன்னும் ஒரு படி மேலே போய் 7 வீரர்களை சிஎஸ்கே உடனடியாக விடுவித்தால்தான் அடுத்த ஐபிஎல் தொடருக்காவது ஓர் இளம் சவால் அணியை உருவாக்க முடியும் என்று கூறுகிறார். இந்த அணியை வைத்துக் கொண்டு இப்போதிருக்கும் எந்த ஐபிஎல் அணியையும் சிஎஸ்கே வெல்லவே முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. முதலில் அவர்கள் நல்ல தலைமைத்துவத்தை அடையாளம் கண்டிருக்க வேண்டும், பிராண்ட் இமேஜ் என்று வயதான தோனியை ஊன்று கோல் வைத்து ஆடும் வரைக்கும் அணியில் நீடிக்க வைப்பது அணியின் பெரும் சரிவுக்குக் காரணமாக அமைந்தது என்பதும் கசப்பான உண்மையே என்று அவர் தெரிவித்துள்ளார்.

____________________________________________________________________

நன்றி தெரிவித்த ராஜஸ்தான் வீரர்

ஐ.பி.எல். தொடரில் டெல்லியில்  நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த நிலையில், போட்டிக்கு பின்னர் ராஜஸ்தான் வீரர் துருவ் ஜூரேல் தோனியை சந்தித்துள்ளார் . இது தொடர்பாக துருவ் ஜூரேல் வெளியிட்டுள்ள  பதிவில், மஹி பாய், எப்போதும் உங்களின் மாணவனாக நான் . உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளுக்கு நன்றி. எப்போதும் மகிழ்ச்சி. என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து