Idhayam Matrimony

ஆலன் டொனால்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பாரா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஜூன் 2025      விளையாட்டு
Jadeja 2024-05-06

Source: provided

மும்பை : ஆலன் டொனால்டின் சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட்... 

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

சுப்மன் கில் கேப்டன்....

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக விக்கெட்டுகள்...

இந்நிலையில், இந்த தொடரில் இந்திய சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரரான ஆலன் டொனால்டின் சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். அதாவது, இந்தத் தொடரில் ஜடேஜா 8 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்டின் சாதனையை முந்தி சாதனை படைப்பார்.

முறியடிப்பாரா?

ஆலன் டொனால்ட் 72 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 330 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் 28-ம் இடத்தில் உள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 323 விக்கெட்டுகளுடன் இந்த பட்டியலில் 31-வது இடத்தில் உள்ளார். இதனால் இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜா இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து