முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி நிதி வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி : மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது. சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.2151.59 கோடி, அதற்கான 6 % வட்டி ரூ.139.70 கோடியும் சேர்த்து ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிட வேண்டுமென கடந்த மாதம் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசு கல்வி நிதியை விடுவிக்காததால் தமிழ்நாட்டில் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. வழக்கறிஞர் பி. வில்சன் கோரிக்கை முன்வைத்தார். ஆனால் நீதிபதிகள் பி. கே. மிஸ்ரா, மன்மோகன் அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று கூறி மறுத்துவிட்டனர். இந்த வழக்கில் எந்த அவசரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து