முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

புதன்கிழமை, 11 ஜூன் 2025      விளையாட்டு
Australia 2024-03-19

Source: provided

லார்ட்ஸ் : தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்திருந்தது.

இறுதிப்போட்டி...

டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. 

முதலில் பந்துவீச்சு... 

இந்த போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. முன்னதாக கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

4 விக்கெட்டுகளை... 

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா, லபுசேன் களமிறங்கினர். தொடக்கத்தில் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேமரூன் கிரீன் 4 ரன்களிலும், லபுசேன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த ஹெட் 11 ரன்களில் வெளியேறினார் இதனால் ஆஸ்திரேலிய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து