முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்த தடை

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      உலகம்
social-media

Source: provided

பாரீஸ்: பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்த அந்த நாட்டு அரசு  தடை விதித்துள்ளது.

பிரான்சில் வருகிற ஒரு சில மாதங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரான்சில் சிறுவர்கள் செல்போனில் சமூக வலைத்தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனால் சிறுவர்கள் தவறான பாதையில் செல்கிறார்கள். மேலும் சிறுவர்கள் வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். சிறுவர்கள் நமது நாட்டின் மனித வளமாக இருக்கும்நிலையில் சமூக வலைத்தளம் மூலமாக அவர்கள் கெட்டு சீரழிவது கண்கூடாக தெரிகிறது. இந்தநிலையில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தடை விதிக்கக்கோரி ஐரோப்ப ஒன்றியத்திடம் புகார் அளித்துள்ளேன். அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை எனில் ஒரு சில மாதங்களில் பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து