முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி: முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்க அணி

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      விளையாட்டு
12-Ram-50

Source: provided

லார்ட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்சில் ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.

இறுதிப் போட்டி...

லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூ.டி.சி. இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடிவில் தெ.ஆ. 43/4 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளில் சிறப்பாகவே தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பாட் கம்மின்ஸ் அபாரம்...

அதற்குப் பிறகு நிதானமாக ஆடிய டேவிட் பெடிங்ஹாம் 445 ரன்கள் எடுத்து அணியை ஓரளவுக்கு நல்ல நிலையில் தூக்கி நிறுத்தினார். இருப்பினும், பாட் கம்மின்ஸின் சிறப்பான பந்துவீச்சினால் தெ.ஆ. அணி சுருண்டது. முதல் இன்னிங்ஸில் ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் 40-ஆவது ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை மாற்றினார். கடைசியில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளுடன் முடித்தார்.

74 ரன்கள் பின்னிலை...

மிட்செல் ஸ்டார்க் 2, ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தார்கள். தெ.ஆ. அணி சார்பில் அதிகபட்சமாக டேவிட் பெடிங்ஹாம் 45 ரன்கள் குவித்தார். தென்னாப்பிரிக்க அணி 74 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. ஆஸி. தனது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கவிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து