முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி வாழ்த்து

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      விளையாட்டு
udhayanidhi-stalin

Source: provided

சென்னை: சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து...

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நார்வே செஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்த நடப்பு இளம் உலக சாம்பியனும், மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான . டி. குகேஷ், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதலிடம் பிடித்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த ர.பிரக்ஞானந்தா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

எலைட் திட்டத்தின் கீழ்...

 அரவிந்த் சிதம்பரம், ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டியில் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் தற்போது  பிடே உலக தரவரிசை பட்டியலில் முதல் 10-தர இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அரவிந்த் சிதம்பரம், டி.குகேஷ் மற்றும்ர. பிரக்ஞானந்தா இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான எலைட் திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகின்றனர்.

நிதியுதவி...

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்கள் தங்களை மேலும் தயார்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் எலைட் திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ரூ. 30 லட்சம் பாய் வழங்கப்படுகின்றது, விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு தேவையான அதிநவீன உபகரணங்களை வாங்கிக் பயன்படுத்தவும், வெளிநாடுகளுக்கு சென்று சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி மேற்கொள்ளவும், தொடர்ந்து சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் எலைட் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகின்றது.

முன்னணி இடமாக...

நார்வே செஸ் போட்டி, ஸ்டீபன் அவாக்யன் நினைவு செஸ் போட்டி ஆகியவற்றில் முன்னணி இடங்களை வென்றதன் மூலம் உலக டாப் 10 தரவரிசையில் இருக்கும் நான்கு இந்திய வீரர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது விளையாட்டில் உலக அளவில் முன்னணி இடமாக தமிழ்நாட்டினை உருவாக்கி வரும் துணை முதல்வரின் முயற்சிகளுக்கு சிறப்பு சேர்பதாக அமைந்துள்ளது.என தெரிவிக்கப்பட்டுள்ளது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து