எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.12.33 கோடி கிடைக்கும்.
இது கடந்த முறை சாம்பியனான ஆஸ்திரேலியா பெற்ற பரிசு தொகையை விட கூடுதலாகும். இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து இருந்தது. 2 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோற்று இந்தியா ஐ.சி.சி. கோப்பையை இழந்தது என்பது குறிப் பிடத்தக்கது. 4-வது இடத்தை பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.10.25 கோடி கிடைக்கும்.
டொனால்டை முந்திய ரபாடா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த அசத்தலான பந்துவீச்சின் மூலம் அந்நாட்டிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆலன் டொனால்டை முந்தியுள்ளார். ஆலன் டொனால்டை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள்
1. டேல் ஸ்டெயின் - 439 விக்கெட்டுகள் (93 போட்டிகள்)
2. ஷான் பொல்லாக் - 421 விக்கெட்டுகள் (108 போட்டிகள்)
3. மகாயா நிதினி - 390 விக்கெட்டுகள் (101 போட்டிகள்)
4. ககிசோ ரபாடா - 332 விக்கெட்டுகள் (71 போட்டிகள்)
5. ஆலன் டொனால்டு - 330 (72 போட்டிகள்)
வீராங்கனை மனு பாக்கர் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றுக்கு 8 பேரில் ஒருவராக நுழைந்த இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் பதக்க மேடையில் ஏற தவறினார்.
அவர் 20 புள்ளிகளுடன் 5-வது இடமே பிடித்தார். சீனாவின் யுஜி சன் 38 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போல் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்தியாவின் செயின் சிங் 407 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சுப்மன் கில்லுக்கு பாராட்டு
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் லீட்சில் வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. முன்னதாக ரோகித் சர்மா ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சுப்மன் கில் குறித்து இந்திய முன்னாள் தலைமை பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரருமான கேரி கிர்ஸ்டன் கூறுகையில், 'சுப்மன் கில், கிரிக்கெட் பற்றி ஆழமாக புரிந்து கொண்ட ஒரு புத்திசாலித்தனமான வீரர். சிறந்த கேப்டனாக உருவெடுப்பதற்குரிய அனைத்து பண்புகளும் அவரிடம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்த அவர் தயாராகி வருகிறார்' என்றார்.
ஏ.பி.டி.யின் செயலால் ஆச்சர்யம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள் கிரிக்கெட்டர்களும் வந்துள்ளார்கள். கேன் வில்லியம்சனும் போட்டியை பார்த்து வருகிறார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இந்தப் போட்டிக்கான வர்ணனையாளராக லண்டன் சென்றுள்ளார். இவருடன் அவரது குழந்தைகளும் போட்டியைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
ஏபிடி தனது குழந்தைகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேனிடம் ஜெர்ஸியில் கையெழுத்து வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த விடியோவைப் பகிரும் ரசிகர்கள், “இதுதான் ஏபிடியின் பெருந்தன்மை” எனப் புகழ்ந்து வருகிறார்கள். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாரனஸ் லபுஷேன் தற்போது முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


