Idhayam Matrimony

ஈரான் மீது தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2025
Crude-oil-2025-05-21

Source: provided

புதுடில்லி : ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உள்ளது.

ஈரானில் 'ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல் விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானில் அணுநிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரத்தில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்த்து இஸ்ரேல் அவசரநிலையை அறிவித்தது. இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ஈரானில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது என்பதை உறுதிப்படுத்தினர்.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 12 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது. போர் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உற்பத்தியை பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து