Idhayam Matrimony

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 78 பேர் பலி-320 பேர் படுகாயம்

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      உலகம்
IRAN 2025-06-14

Source: provided

இஸ்ரேல் : ஈரான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 78 பேர் உயிரிழந்து உள்ளனர். 320-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் அணுசக்தி நிலையங்கள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டன. தெஹ்ரான் மற்றும் இஸ்ஃபஹான் உள்ளிட்ட பல நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டன. 

இந்தத் தாக்குதலில் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஈரான் ஐ.நா. தூதர் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்குப் பதிலடியாக, ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன், குறைந்தது 34 பேர் காயமடைந்தனர்.

நேற்று அதிகாலை வரையிலும் இரு நாடுகளும் மாறி மாறி வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இஸ்ரேல் பல ஈரானிய ஏவுகணைகளை அமெரிக்காவின் உதவியுடன் இடைமறித்ததாகக் கூறியது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழி சைரன்கள் ஒலித்தன, மத்திய இஸ்ரேல் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன. இரு நாடுகளும் மேலும் தாக்குதல்களைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து