முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 17 ஜூன் 2025      இந்தியா
Air-India

Source: provided

அகமதாபாத் : அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது.

குஜராத்தின் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த 12-ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் 270 பேர் பலியாகினர். அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்ல இருந்த விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்படுவது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் பயணித்த அதே வழித்தடத்தில் செல்ல இருந்த மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த நிலையில், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், " ஏர் இந்தியாவில் ஏஐ 159 விமானம், பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் மூன்று மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அதாவது, 1.45 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்" என்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து