முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மருத்துவர்கள் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 1 ஜூலை 2025      தமிழகம்
CM 2024-12-03 (2)

Source: provided

சென்னை : மருத்துவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்று தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான், மருத்துவர் தினம். 'உலக மருத்துவ தினம்' என்று இருந்தாலும், 'தேசிய மருத்துவ தினம்'என்ற ஒன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அது நாட்டுக்கு நாடு மாறுபாடு கொண்டதாக இருக்கிறது.

அந்த வகையில் இந்தியாவில் ஜூலை 1-ம் (நேற்று) தேதியை, தேசிய மருத்துவர் தினமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். இந்த தினத்தை பெரும்பாலும் மருத்துவ நிறுவனங்கள் மட்டுமே கொண்டாடி வருகின்றன. 1991-ம் ஆண்டு முதல் இந்தியாவில் 'தேசிய மருத்துவர் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- "எளிய பின்புலங்களில் இருந்து வந்து, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, மக்களின் நலன் காக்கும் தலைசிறந்த மருத்துவர்கள் அனைவருக்கும் தேசிய மருத்துவர்கள் தின வாழ்த்துகள். தன்னலமற்ற சேவைக்குச் சொந்தக்காரர்களான நமது மருத்துவர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள்! அவர்களது சேவைக்கு நமது நன்றியின் அடையாளமாகத் தலைசிறந்த 50 மருத்துவர்களுக்கு இன்று (நேற்று) விருதுகள் வழங்கி மகிழ்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து