முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவியும் மக்கள்

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      இந்தியா
Mysuru-2025-07-10

மைசூரு, மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவிந்து வரும்  மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்​நாடக மாநிலத்​தில் உள்ள ஹாச‌ன் மாவட்​டத்​தில் கடந்த 40 நாட்​களில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயி​ரிழந்​தனர். இதனால் பீதியடைந்த மக்கள் மைசூருவில் உள்ள பிரபல ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்துகொள்வதற்காக குவிகின்றனர். அதிகாலை தொடங்கி இரவு வரை காத்திருந்து இதய செயல்பாடு குறித்த பரிசோதனைகளை செய்து கொண்டு செல்கின்றனர். மருத்துவமனையில் மக்கள் கூட்டம் நிரம்பிவழியும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மருத்துவமனை தரப்பும், ஹாசன் மாவட்டத்தில் 45 வயதுக்​குட்​பட்ட‌ 23 பேர் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்​த செய்திகள் பரவிய பின்னரே இந்த அளவுக்குக் கூட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மைசூரு ஜெயதேவா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்ட கே.எஸ். சதானந்த் கூறுகையில், “ஊடக செய்திகளைப் பார்த்துவிட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஜெயதேவா மருத்துவமனையில் இதயப் பரிசோதனை செய்து கொள்வது மட்டுமே பிரச்சினையைத் தீர்த்துவிடாது.  

மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். அதைவிடுத்து அனைவரும் இங்கே குவிந்தால், ஏற்கெனவே உள்நோயாளிகளாக இருக்கும் இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க இயலாமல் போய்விடும். வதந்திகளை நம்ப வேண்டாம்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து