Idhayam Matrimony

3,500 கோவில்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் குடமுழுக்கு நடத்தப்படும் அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

ஈரோடு: இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறும் என அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்தார்.

ஈரோடு திண்டல் மலையில் வேலாயுத சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தற்போது ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கோவில் முன்பு 186 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  மன்னர் ஆட்சி காலத்தை விட திராவிட மாடல் ஆட்சியில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3,500 கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா நடைபெறும். இந்த ஆக்கபூர்வமான பணிக்கு துறையின் சார்பில் கேட்கப்படும் நிதிகள் வழங்கப்படுகிறது. இதுவரை 1,120கோடி ரூபாய் அரசிடம் இருந்து மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 124 திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

 இந்த ஆட்சியில் அனைத்து சைணவம், வைணவம் கடவுளுக்கும் சிறப்பு சேர்ப்பதுடன் முருகனுக்கு மாநாடு நடத்தி பெருமை சேர்த்தவர் முதல்வர் ஸ்டாலின் தான். ஆசியாவில் மிக உயரமான 186 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணிகள் ஈரோடு திண்டல் கோவிலில் அமைக்கப்பட்ட உள்ளது. உலக அளவிலான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காலம் கடந்து நிற்கும் வகையில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் சிலை அமைக்கப்படும். இந்த ஆட்சியில் மட்டும் 1,400கோடி ரூபாய் வரை உபயதாரர்கள் நிதி வந்துள்ளது, கடந்த எந்த ஆட்சியில் இதுபோன்ற உபயதாரர்கள் நிதி வந்ததில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து