முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

திங்கட்கிழமை, 14 ஜூலை 2025      ஆன்மிகம்
Amarnath

ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பஹல்காமில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோவில் அமைந்துள்ளது.

அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை கடந்த 3-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

இந்தநிலையில், சிஆர்பிஎப் மற்றும் காவல்துறையினரின் துணையுடன், 4,691 ஆண்கள், 1,248 பெண்கள் மற்றும் 17 குழந்தைகள் உள்பட 6,143 பக்தர்களைக் கொண்ட 13வது குழு, பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து நேற்றுஅதிகாலை 3:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை 235 வாகனங்களில் புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் யாத்திரைக்காக ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து