Idhayam Matrimony

காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 15 ஜூலை 2025      தமிழகம்
Kamarajar 2023 07-18

சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்திகளை அளித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் ரவி: பெருந்தலைவர்  காமராஜர்  தேசபக்தி நிறைந்த தேசியவாதி, துணிச்சல்மிகு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் நவீன தமிழ்நாடு மீது தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியாக விளங்கினார். ஒவ்வோர் கிராமத்திலும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் கல்வியை உலகளாவியதாக மாற்றினார், புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார்,  நீர்ப்பாசனம் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் விவசாயத்தை புத்துயிர் பெறச்செய்தார்.

 இன்று, தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது - அதற்கு காரணமான அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் உள்ளடக்கிய தலைமைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி: கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது உழைத்திட்ட பெருந்தலைவர். சத்துணவு தந்து மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர். நிர்வாக திறனுக்கு எடுத்துக்காட்டாகவும், எளிமைக்கு இலக்கணமாகவும், பொதுநல வாழ்வின் உதாரண அவதாரமாக திகழ்ந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த தினத்தில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன்.

உதயநிதி ஸ்டாலின்: எட்டாக்கனியாக இருந்த கல்வி, ஏழை - எளிய பிள்ளைகள் எல்லோருக்கும் சென்று சேர பள்ளிகளை திறந்து, மதிய உணவிட்ட காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாள் என்று அறிவித்தார் கருணாநிதி. காமராஜர் வாழ்ந்த தியாகராய நகர் இல்லத்தை புதுப்பிப்பதோடு, அவர் பெயரில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை திருச்சியில் அமைக்கிறார் நம் முதல்வர் ஸ்டாலின்.  பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் - வழிகாட்டும். அவர் புகழ் ஓங்கட்டும்.

அன்புமணி: தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் அவர். அவர் எத்தகைய ஆட்சியைக் கொடுத்தாரோ, அத்தகைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு மீண்டும் கிடைக்கும் என்றால் அது தான் உண்மையான பொற்காலமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி: ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து