முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கியது தமிழக அரசு

புதன்கிழமை, 16 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி  நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி  தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுளளது.  இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்  உள்ளதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கிராம ஊராட்சி நிர்வாக அலுவலரின் அனுமதி இன்றி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதிச் சான்றினை கோரி அறிவிப்பினை வழங்க வேண்டும். அனுமதி இன்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக அள ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடம் தொடர்ந்து கட்டப்பட்டுக் கொண்டிருந்தால் அதை பூட்டி முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு உள்ளது என  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து