Idhayam Matrimony

இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: கருண் நாயர் இடம் பெறுவாரா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      விளையாட்டு
Karun-Nair 2025-07-19

Source: provided

மான்செஸ்டர் :  4வது டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின்  உதவி பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.

பின்தங்கிய இந்தியா...

இந்தியா- இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் சாய் சுதர்சன் 3ஆவது இடத்தில் களம் இறங்கினார். அவர் சிறப்பாக விளையாடாததால், கருண் நாயர் 3ஆவது இடத்தில் களம் இறக்கப்பட்டார். ஆனால் 20 முதல் 30 என ரன்கள் அடிக்கிறார். பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இதனால் கருண் நாயர் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேவையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. 

எதிர்பார்க்கிறோம்...

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட், "கருண் நாயர் சிறப்பான பங்களிப்பைத் தருவதாக நாங்கள் உணர்கிறோம். 3-வது இடத்தில் களமிறங்கும் வீரரிடமிருந்து அதிக ரன்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனாலும், நமக்குப் பலனளிக்காத சிறிய விஷயங்கள் சரிசெய்யப்படும்"என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து