முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் பா.ஜ.க. கூட்டணியை விட்டு விலகுவது போல 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கூட்டணிக் கட்சிகளை அ.தி.மு.க.வில் சேர்க்க முயன்றார் பழனிசாமி. ஆனால், அது கைகூடவில்லை. ஆனால், அ.தி.மு.க.வின் கூட்டணி கணக்கை டில்லியில் இருக்கும் பழனிசாமியின் முதலாளிகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து, கூட்டணியை அறிவித்து விட்டுப் போனார். 

அ.தி.மு.க. கூட்டணி அமைந்தாலும் அதனை ’அ.தி.மு.க. கூட்டணி’ என்று அ.தி.மு.க.வினரைத் தவிர மற்றவர்கள் யாருமே சொல்வதில்லை. பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட, ’தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகள் எந்தக் காலத்திலும் வளராது’ என விரக்தியாக பழனிசாமி சாபம் இட்டார். அப்படிப் பேசிய நாக்குதான், பிறகு கூட்டணிக்காகக் கெஞ்சின.  இப்போது ‘கம்யூனிஸ்ட் கட்சியினர் தி.மு.க.விடம் பணம் வாங்கியபோதே அவர்களது கதை முடிந்துவிட்டது’’ என மோசமாகப் பேசுகிறார்.

இப்படி  தோல்வி மேல் தோல்வியடைந்து வரும் பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் படுதோல்வி அடைவார் என்பது உறுதியானதால்தான் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி கூட்டணிக் கட்சிகளுக்கு ஆள் பிடிக்க பஸ்சில் பயணிக்கிறார்.  மக்கள்,  பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியைப் புறக்கணித்து  முதல்வர் மு.க.ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றுவார்கள். மக்களின் பேராதரவோடு திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து