முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பம் : 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்ற மழைகால தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்து தொடரில் 'ஆபரேஷன் சிந்தூர்' உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் தொடரம் முழுவதும் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.

ஆகஸ்ட் 21 வரை... 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஆகஸ்டு 12 முதல் 18-ம் தேதி வரை பாராளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது. ஏப்ரலில் நடந்த பகல்காம் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடியாக மே மாதம் பாகிஸ்தான் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் இரு நாடுகளின் ராணுவ மோதலுக்கு பிறகான முதல் கூட்டத் தொடா் என்பதால் முக்கியத்துவம் பெற்று உள்ளது.

விமான விபத்து... 

ஆபரேஷன் சிந்தூர், டிரம்பின் பேச்சு,பீகாரில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை மீறி நடை பெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், சீன எல்லை விவகாரம், மணிப்பூருக்கு பிரதமா் மோடி இதுவரை பயணம் மேற்கொள்ளாதது, நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களும் முக்கியமாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பல்வேறு பிரச்சினைகளுக்காக எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி போராட் டத்தில் ஈடுபடும் என்று கருதப்படுகிறது. 

8 புதிய மசோ தாக்கள்... 

இந்த மழைக்கால கூட்டத் தொடரில் 8 புதிய மசோ தாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 8 புதிய சட்ட மசோதாக்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேசிய விளையாட்டு நிா்வாக சட்ட மசோதா, புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்ட மசோதா, சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து எதிா்ப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் வரும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளன.

மணிப்பூரில் ஆட்சி...

இந்த மசோதாக்கள் தவிர, மணிப்பூா் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் சட்டத்திருத்த மசோதா, இந்திய மேலாண்மை நிறுவன சட்டத்திருத்த மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்தம் மசோதா ஆகிய மேலும் 4 சட்டத்திருத்த மசோதாக்களும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தக் கூட்டத்தொடரில், மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சியை நீட்டிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசு நாடவுள்ளது. மேலும், அந்த மாநிலத்துக்கான நிதிமானியக் கோரிக்கைகளும் அவையின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்படவுள்ளன.

விவாதத்திற்கு எடுக்க...

கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினா் சட்டப்பேரவைத் தொகுதி பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பதற்கான மசோதா, வணிக கப்பல் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா ஆகியவை மக்களவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

புதிய மசோதாக்கள் விவரம்

1) சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா

2) ஜன் விஸ்வாஸ் விதிகள் திருத்த மசோதா

3) இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா

4) வரிவிதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா

5) புவி-பாரம்பரிய தளங்கள் மற்றும் புவி-எலிக்ஸ் 

(பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா

6) சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் 

(மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா

7) தேசிய விளையாட்டு ஆளுகை மசோதா.

8) தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு திருத்த மசோதா 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து