முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும்: ஸ்டீவ் ஹார்மிசன்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      விளையாட்டு
Verat Koil 2023 08 13

Source: provided

லண்டன் : லார்ட்ஸ் டெஸ்ட்டில் விராட் கோலி இருந்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார் என இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ளார். 

லார்ட்சில்...

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

திரில் வெற்றி...

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.

கணக்கு போட்டு... 

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் ஊசலாடியது. இதனால் இங்கிலாந்து எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். இதையடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன், ஜஸ்பிரித் பும்ரா கூட்டு சேர்ந்தார். பும்ரா முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஒரு மணி நேரத்திற்கு மேலாக இங்கிலாந்து பவுலர்களை சோதித்தார். இருவரும் ஓவருக்கு ஒரு ரன் அல்லது மெய்டன் என்ற ரீதியில் கணக்கு போட்டு ஆடினர். இதனால் இந்தியா கொஞ்சம் சரிவில் இருந்து மீள்வது போல் தெரிந்தது.

ஜடேஜா அரைசதம்...

ஸ்கோர் 147-ஐ எட்டிய போது பும்ரா (5 ரன், 54 பந்து) ஸ்டோக்ஸ் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஆனாலும் ஜடேஜா களத்தில் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4-வது அரைசதத்தை கடந்தார். இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வீசிய பந்தை எதிர்கொண்ட சிராஜ் அதை தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. சிராஜ் 4 ரன்னில் (30 பந்து) போல்டு ஆனார். இப்படி இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கோலி இருந்திருந்தால்... 

இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த தொடரில் இந்தியா அதிக சதங்கள், அதிக டாப்-ஆர்டர் ரன்கள் மற்றும் புதிய பந்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளது. ஆனால் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்கும் திறமையைப் பெற்றுள்ளது. 

எளிதாக...

ஒவ்வொரு செசனிலும் வெற்றிக்கு வித்திடக்கூடிய தருணங்களை உருவாக்குவது போட்டியின் போக்கை மாற்ற வல்லது. என்னைப் பொறுத்தவரை, இந்தியா நம்பத் தொடங்க வேண்டும். விராட் கோலி போன்றவர்கள் சிறப்பானவர்களாக இருந்த இடம் இதுதான். ஒருவேளை விராட் கோலி இந்த போட்டியில் விளையாடியிருந்தால் 4வது இன்னிங்சில் சேசிங் செய்த இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருப்பார். லார்ட்சில் நடந்த இந்த ஆட்டத்தை அவர் எளிதாக வென்றிருப்பார்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து