முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிதான் வேண்டும்: நிவாரண நிதியை பெற்றுக்கொள்ள இளைஞர் கவின் பெற்றோர் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2025      தமிழகம்
Kavin-Kumar 2025-07-28

Source: provided

நெல்லை : கவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கான காசோலையை அவரது பெற்றோர் வாங்க மறுத்து விட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி.  இவர்களது மகன் கவின் செல்வகணேஷ்(வயது 27). இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில், காதல் பிரச்சனையில், கவின் 3 நாட்களுக்கு முன் பாளை கே.டி.சி. நகர் பகுதியில் வைத்து சுர்ஜித் என்பவரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து சுர்ஜித் என்பவரை கைது செய்தார். இந்த கொலை சம்பவத்தில் அவரது தாய்-தந்தையரான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி  மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில் கவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்குவதற்காக பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால் எங்களுக்கு நிவாரணம் வேண்டாம், நீதி வேண்டும். கொலைக்கு முக்கிய காரணமான சுர்ஜித்தின் பெற்றோரை 24 மணி நேரத்தில் கைது செய்வோம் என நேற்று அதிகாரிகள் எங்களிடம் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் 15 மணி நேரத்திற்கு மேலாகியும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. இன்று மதியத்திற்குள் அவர்களை கைது செய்யாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என கூறி நிவாரண தொகையை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து