முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தமிழ்நாடு திரும்புகிறேன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2025      தமிழகம்
CM-3 2025-09-06

Source: provided

லண்டன் : அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன் என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவார கால பயணம்.... 

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த 30 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்பவிருக்கிறார். முதலில் ஜொ்மனி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவர்களுடனும், முதலீட்டாளர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, லண்டன் நகருக்குச் சென்ற அவர், முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

15,516 கோடி ரூபாய்...

இந்துஜா குழுமம் உள்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனைகளை நடத்தி முதலீடுகளை ஈா்த்த முதல்வர், இரு நாடுகளிலும் மேற்கொண்ட பயணத்தில் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அன்பு பொழிந்த.... 

இந்தப் பயணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய டிஎன் ரையிஸிங் பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட தமிழ் வம்சாவளியினருக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

தீங்கு நினைக்கும்.... 

முன்னதாக லண்டன் நகரில் நடைபெற்ற தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் இங்கிலாந்து வாழ் தமிழர்கள் இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-  உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களாகிய நாம் நமது மொழியையும் பண்பாட்டையும் விடமாட்டோம். சுயமரியாதை, சமத்துவ எண்ணம், சமூகநீதி கோட்பாட்டையும் விடமாட்டோம். திராவிடத்தால் வாழ்கிறோம் என பெருமிதத்துடன் சொல்கின்ற தமிழர்களை இங்கு பார்க்கிறேன். தமிழுக்குத் தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும் ஒருபோதும் நிறைவேறாது.

தூதுவர்களாக... 

தமிழ்நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்கிற தூதுவர்களாக இங்கிலாந்து வாழ் தமிழர்கள் திகழ்கின்றனர். சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு இங்கிலாந்து வாழ் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து