முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. எம்.எல்.ஏ. மறைவு: சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமா?

வியாழக்கிழமை, 23 அக்டோபர் 2025      தமிழகம்
Elections 2024-04-01

Source: provided

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை.

சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். அவருக்கு வயது 74. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 2001, 2006 ஆம் ஆண்டுகளில் சேந்தமங்கலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார். ஆரம்பத்தில் அ.தி.மு.க.வில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னுசாமி, பிறகு தி.மு.க.வில் இணைந்தார். இவர் 2016ம் ஆண்டு தி.மு.க. சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், கடந்த  2021 சட்ட சபை தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட  பொன்னுசாமி வெற்றி பெற்றார். 

பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொன்னுசாமி மறைவால்  சேந்தமங்கலம் தொகுதி காலியாகியுள்ளது.  எனினும், தமிழகத்தில் சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து