முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட நான்கு வீரர்கள் விடுவிப்பு?

செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2025      விளையாட்டு
Kolkata 2025-02-24

Source: provided

மும்பை : 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 15 அல்லது 16-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த மாதம்...

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 15 அல்லது 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 15-ந்தேதிக்குள் 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

4 வீரர்களில்.... 

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து 4 வீரர்களை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வெங்கடேஷ் ஐயர், நோர்ஜ், டி காக், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரை கழற்றி விட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 வீரர்களில் வெங்கடேஷ் ஐயர் மட்டும் ரூ.23.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. இதனால் கொல்கத்தா அணி ரூ.40 கோடியுடன் ஏலத்தில் களமிறங்கும் எனவும் கூறப்படுகிறது. கடந்த சீசனுக்கு முந்தைய சீசன் ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து