முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
Modi 2025-11-11

Source: provided

புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பூட்டானுக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, தலைநகா் திம்புவில் அந்நாட்டின் மன்னா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக்கை சந்தித்துப் பேசினார். அப்போது, அந்நாட்டுக்கு ரூ.4,000 கோடி கடனுதவி இந்தியா அறிவித்து. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம்-மருந்துகள், மனநல மருத்துவத் துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

பூடானில் நடைபெற்று வரும் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவில் காலசக்கரம் அதிகாரமளிப்பு விழாவைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில்,

பூடான் மன்னருடன் காலசக்கரம் அதிகாரமளிப்பு விழாவை தொடங்கிவைக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. இது உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கியமான சடங்கு எனக் குறிப்பிட்டுள்ளார். காலசக்ரா அதிகாரமளிப்பு என்பது பௌத்தர்களையும் புத்த மத அறிஞர்களையும் ஒன்றிணைத்த உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழாவின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, பூட்டானின் முன்னாள் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு நல்லுறவின் அனைத்து பரிமாணங்கள் குறித்தும் விவாதித்தோம். பூடானின் வளர்ச்சி பயணத்தில் முக்கியக் கூட்டாளியாக இருப்பது இந்தியாவுக்குப் பெருமை என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து