முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிற்சியாளராக சவுதி நியமனம்

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      விளையாட்டு
14-Ram-98-1

Source: provided

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் சமர்ப்பிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் வீரர்கள் பரிமாற்றத்துக்கான பரஸ்பர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. மேலும் ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சியாளர் குழுவை மாற்றியமைத்து வருகின்றனர். 

அந்த வகையில் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து பாரத் அருணை நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டிம் சவுதி நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயரும் உதவி பயிற்சியாளர் ஷேன் வாட்சனும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கேப்டனாக வருண் சக்கரவர்த்தி 

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் வருகிற நவம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டனாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக நாராயண் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் மற்றும் இளம் வீரர் ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடருக்கான தமிழ்நாடு அணி விவரம்:- வருண் சக்கரவர்த்தி (கேப்டன்), நாராயண் ஜெகதீசன் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்),துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்)வி.பி. அமித் சாத்விக், ஷாருக் கான், ஆண்ட்ரே சித்தார்த், பிரதோஷ் ரஞ்சன் பால், சிவம் சிங், ஆர். சாய் கிஷோர், எம். சித்தார்த், டி. நடராஜன், குர்ஜப்னீத் சிங், ஏ. இசக்கிமுத்து, ஆர். சோனு யாதவ், ஆர். சிலம்பரசன், எஸ். ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்).

அரையிறுதியில் லக்ஷயா சென் 

குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜப்பானில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா சென், முன்னாள் சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூ உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சுற்றுப்பயணத்தில் தனது முதல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

பாக்.கிற்கு அணிக்கு அபராதம் 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 11ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. 

முன்னதாக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. 4 ஓவர்கள் தாமதமாக பந்துவீசி உள்ளது. அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து தலா 20 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது. 

வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி 

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்படி வங்காளதேசம் - அயர்லாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹெட்டில் கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 92.2 ஓவர்களில் 286 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.  இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேசம் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 

இதன் மூலம் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 301 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து 301 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 70.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த அயர்லாந்து அணி 2-வது இன்னிங்சில் 254 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

ரொனால்டோவிற்கு ரெட் கார்டு

அயர்லாந்து உடனான ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி மோதியது. இந்தப் போட்டியில் அயர்லாந்து 2-0 என வென்றது. இதில், 61-வது நிமிஷத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். அயர்லாந்து வீரரை தனது முட்டியினால் வேண்டுமென்றே இடித்ததால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த நபரை அழ வேண்டாம் என ரொனால்டோ கிண்டல் செய்தார். ரெட் கார்டு கொடுத்ததும் ரொனால்டோவைப் பார்த்து அயர்லாந்து ரசிகர்கள் அழ வேண்டாமென சைகை செய்தனர். 

குரூப் எஃப் பிரிவில் போர்ச்சுகல் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகளுடன் ஹங்கேரி இரண்டாமிடமும் 7 புள்ளிகளுடன் அயர்லாந்து மூன்றாமிடமும் வகிக்கிறது. ஹங்கேரியின் ஆட்டத்தை வைத்து நாளை போர்ச்சுகலின் உலகக் கோப்பை உறுதிசெய்யப்படும். அப்படி போர்ச்சுகல் தேர்வாகும்பட்சத்தில், உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரொனால்டோ விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் ரொனால்டோவின் சைகைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இரண்டு போட்டிகளில் தடை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து