முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அண்ணா நகரில் 97 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலக கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 17 நவம்பர் 2025      தமிழகம்
CM-2-2025-11-17

Source: provided

சென்னை : சென்னை அண்ணா நகரில் ரூ.97 கோடி செலவில் புதிய அலுவலக கட்டடத்தை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். 

தமிழ்நாடு அரசின் கட்டடம் மற்றும் வீட்டுவசதி சார்பில் டி.என்.எச்.பி. என அழைக்கப்படும் கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்பாயமானது சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் இயங்கி வந்தது.

இந்நிலையில் இந்த அமைப்புக்கு சென்னை அண்ணா நகரில் ரூ.97 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். இத்தகைய நிகழ்ச்சியில் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான சிவதாஸ் மீனா மற்றும் பல்வேறு உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து