முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை: கவுகாத்தியில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம் : புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2025      விளையாட்டு
India 2024-01-29

Source: provided

கவுகாத்தி : இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னிலை பெற்றது...

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இப்போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

38-வது கேப்டனாக... 

முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்திய டெஸ்ட் அணியின் 38-வது கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாய் சுதர்சன் இடம்.... 

கழுத்து வலியால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அணிக்கு திரும்பியிருக்கும் இந்திய கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவர் உடனடியாக களம் கண்டால், கழுத்து வலி பிரச்சினை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் 2-வது டெஸ்டில் விளையாடமாட்டார் என்றும், கில்லுக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம் பெற வாய்ப்புள்ளது.

நிதிஷ் குமாருக்கு....

அதேபோல அக்ஷர் படேலுக்கு பதிலாக நிதிஷ் குமார் அணியில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து