எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, "தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் நிறைவு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை, தான் சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான், புத்தகங்கள்.
வாசிப்பு மூலமாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும் என்று, ஏராளமான முன்னெடுப்புகளை நம்முடைய திராவிட மாடல் அரசு சார்பில் எடுத்து செய்து கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது தான், புத்தகத் திருவிழாக்கள். எழுத்தாளர்கள் - பதிப்பாளர்கள் - விற்பனையாளர்கள் – வாசகர்கள் என்று எல்லோருக்குமான உறவுப் பாலமாக, இந்த புத்தகத் திருவிழாக்களை சிறப்பாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தலைநகரான சென்னையில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழாக்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாகதான், இந்த நான்காவது சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 102 நாடுகளின் பங்கேற்போடு சிந்தனையின் ஊற்றாக, பண்பாட்டின் கருவூலமாக, அறிவுப் பரிமாற்றத்தின் அடித்தளமாக, இந்த பன்னாட்டு புத்தகத் திருவிழா நிறைவடைந்ததில் தமிழ்நாடு முதல்வராக மட்டுமல்லாமல், புத்தக ஆர்வலனாகவும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் சர்வதேச புக்கர் பரிசை வென்ற கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக், இந்த மேடையில் இருப்பது என்னுடைய மகிழ்ச்சியை மேலும் கூட்டுகிறது.
“ஏற்கனவே, ஒய்.எம்.சி.ஏ. திடலில், ஒரு புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறதே, அப்படியானால், இந்த பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் என்ன?” என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, இந்தப் புத்தகத் திருவிழாவில் - மொழிபெயர்ப்புகள், பதிப்புரிமை பரிமாற்றம் ஆகியவற்றில்தான் மிகுந்த முக்கியத்துவம் செலுத்தியிருக்கிறோம். அது எவ்வளவு அவசியம் என்பதற்கு இங்கே வந்திருக்கக்கூடிய பானு முஷ்டாக் அவர்களின் வெற்றியே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால்தான் அவருடைய “ஹார்ட் லேம்ப்” நூலும், தென்னிந்தியப் பெண்களின் வாழ்வுரிமை வாழ்க்கையும், உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
நம்முடைய திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த, பிற்போக்குத்தனங்களை எதிர்க்கின்ற, சமூகநீதிப் பார்வை கொண்ட, ஒரு பெண் எழுத்தாளரின் வருகையால் நம்முடைய புத்தகத் திருவிழா இன்றைக்கு மிகுந்த சிறப்படைந்திருக்கிறது. எதையும் கேள்விகேட்டு, விமர்சனப் பார்வையுடன் அணுகி, பழமைகளை பொசுக்கிய திராவிட இயக்கம் தமிழ்நாட்டை பண்படுத்தியது. அதேபோல, கர்நாடகத்தில், கன்னட புரட்சி இலக்கிய மரபில் இயங்கி வருகின்ற பானு முஷ்டாக், நம்முடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்காக என்னுடைய நன்றியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, அமீரகம் - இப்படி, உலகத்தின் பல பகுதிகளில், இது போன்ற பன்னாட்டு புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்ற செய்திகளை நான் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் இப்படிப்பட்ட முன்னெடுப்புகள், தமிழ்நாட்டிலும் நடைபெற வேண்டும் என்று நான் நினைப்பேன். அந்த எண்ணத்தை இப்போது நம்முடைய திராவிட மாடல் அரசில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
நம்முடைய மண்ணின் சிந்தனைகளும், எழுத்துகளும் உலகம் முழுக்கப் பரவவேண்டும்; உலகின் உயரிய சிந்தனைகள் நம்முடைய மக்களிடம் வந்தடைய வேண்டும் என்ற கனவு இந்த நிகழ்ச்சியால் நனவாகியிருக்கிறது. மொத்தத்தில் இப்படியொரு அறிவுச் சங்கமத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இலக்கியத்திற்கு எல்லைகள் கிடையாது. திருவள்ளுவரின் அறமும், இளங்கோ அடிகளின் காப்பியமும், பாரதியின் கவிதைகளும், பாரதிதாசனின் கருத்துக்களும் உலகமெல்லாம் ஒலிக்கவேண்டும். அதே வேளையில், உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் இலக்கியப் படைப்புகள், எளிய தமிழில், நம்முடைய கிராமத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். இதற்காகவே நம்முடைய அரசு, 'தமிழ்நாடு மொழிபெயர்ப்பு முகமை' மூலம் பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கித் தந்து, கடந்த 3 ஆண்டுகளில், நூற்றுக்கணக்கான நூல்கள் இதன் மூலமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் நடைபெறும் 'பதிப்புரிமைப் பரிமாற்றம்' வெறும் வணிகம் கிடையாது; இரு மொழிகளுக்கு இடையே நடைபெறுகின்ற பண்பாட்டுக் கைக்குலுக்கல். செம்மொழியான தமிழின் சங்க இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை உலக மக்களுக்கு சென்று சேரவேண்டும். இந்த நிலப்பரப்பிலிருந்து எவ்வளவு ஆழமான, பரந்த சிந்தனை கொண்ட கருத்துக்கள், இலக்கிய, இலக்கண மரபுகள் உருவாகியிருக்கிறது என்று நாம் உணர்த்த வேண்டும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலமாக, சிறந்த தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். ஏ.ஐ. கோலோச்சும் இந்த காலத்தில், புத்தகங்களையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் இணைக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துகாட்டுவதாக இந்த அரங்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது.
இங்கே வந்திருக்கின்ற உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம். கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளை பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும்.
உலக நாடுகளின் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டு வாருங்கள்; அதேபோல, மனிதநேயத்தையும், சமூகநீதியையும் பேசுகின்ற எங்கள் திராவிடக் கருத்தியல் இலக்கியங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்; எழுத்தாளர்கள் உலகை வெல்வதை பெருமிதத்தோடு எதிர்நோக்கி அனைவரும் காத்திருப்போம். மொழி என்பது பிரிக்கக்கூடிய சுவர் இல்லை, அது உலக மக்களை இணைக்கும் பாலம். புத்தகங்கள் வெறும் பேப்பர் கிடையாது. அவை ஒரு தலைமுறை, மற்றொரு தலைமுறைக்கு விட்டுச் செல்லும் அறிவுச் சொத்து.
மனதுக்கு நெருடலாக ஒரு செய்தி தலைநகர் டெல்லியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வந்தது. உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், மத்திய அரசின் கலாச்சாரத் துறை தலையீட்டால், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இனி, அது நடக்குமா? என்றும் தெரியவில்லை. கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடுகள் செய்வது ஆபத்தானது. இப்படி ஒரு சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இது, காலத்தின் தேவை என்று நாங்களும் உணர்ந்தே இருக்கிறோம்.
அதன்படி, உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கின்ற ஒரு அறிவிப்பை இந்த மேடையில் வெளியிட விரும்புகிறேன். குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளியாகின்ற, தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும். இதனை அறிவிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் வெளியாகின்ற தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் "செம்மொழி இலக்கிய விருது" என்ற பெயரில் அந்த விருது வழங்கப்படும். விருதுடன், தலா 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.
படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். புரவலர் பணியை தமிழ்நாடு அரசு மனநிறைவோடு மேற்கொள்ளும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பானு முஸ்தாக், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லியோனி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Mar 2026சென்னை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய
-
சர்வதேச விமான நிலையமாக மாறும் மதுரை விமான நிலையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
10 Mar 2026புதுடெல்லி, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை: மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
10 Mar 2026சென்னை, கோவையில் ஜி.டி.நாயுடுவின் திருவுருவ சிலை மற்றும் மெரினாவில் ரூ.1.43 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கல்விச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் துவங்குகிறது: தனித்தேர்வர்கள் உள்பட 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்
10 Mar 2026சென்னை, தமிழகம் முழுவதும் 4,219 மையங்களில் 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப
-
ஈரான் போர் குறித்து ட்ரம்ப் - புதின் ஆலோசனை
10 Mar 2026மாஸ்கோ, ஈரான் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
10 Mar 2026சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கு விற்பனையானது.
-
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும்: பார்லி., மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
10 Mar 2026சென்னை, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை அடுத்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உடனே பதவி விலக வேண்டும் என்று பாராளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளிய
-
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை
10 Mar 2026லாகூர், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் பிரச்சினை: பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
10 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்பட
-
இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு
10 Mar 2026கொழும்பு, இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
-
திருச்சி பஞ்சப்பூரில் இன்று நடைபெறும் என்.டி.ஏ சார்பில் பொதுக்கூட்டம்; பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு: இ.பி.எஸ். உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்
10 Mar 2026திருச்சி, பிரதமர் மோடி பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி பஞ்சப்பூரில் இன்று (புதன் கிழமை) மாலை நடக்கிறது.
-
ராமேஸ்வரம்-மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்பட தமிழ்நாட்டிற்கு 5 புதிய ரயில் சேவைகள் இன்று தொடக்கம் : பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்
10 Mar 2026திருச்சி, நெல்லை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்கான 5 புதிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
-
தமிழ்நாட்டில் உரிய நேரத்தில் கேஸ் சிலிண்டர் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு இ.பி.எஸ். கோரிக்கை
10 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
த.வெ.க. சார்பில் விருப்பமனு: 60 பேரிடம் விஜய் நேர்காணல்
10 Mar 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட த.வெ.க சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த 60 பேரிம் விஜய் நேற்று நேர்காணல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நாட்டில் 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு: எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் பதற்றத்தால் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையை சமாளிக்கவும், அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலை தடுக
-
டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த பி.சி.சி.ஐ.
10 Mar 2026மும்பை, ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு இதுவரை இல்லாத அளவிலான பரிசுத்தொகையை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம்: தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை
10 Mar 2026சென்னை, மத்திய கிழக்கள் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.
-
போர் விரைவில் முடிவுக்கு வரும் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை சரிவு
10 Mar 2026நியூயார்க், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்தது.
-
வருகிற 13-ம் தேதி வரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
10 Mar 2026புதுடெல்லி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மார்ச் 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிற
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: வரும் 17-ம் தேதி சி.பி.ஐ விசாரணைக்கு நேரில் ஆஜராகிறேன்: செந்தில் பாலாஜி
10 Mar 2026கரூர், கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொர்பாக வருகின்ற மார்ச் 17 அன்று சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக தமிழக முன்னாள
-
தமிழகத்தில் வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அச்சம்: மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி. கோரிக்கை
10 Mar 2026சென்னை, வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் தமிழகத்தில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், இந்த பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காண கனிமொழி எம்.பி.
-
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரான் மீது 20 மடங்கு கூடுதலாக தாக்குதல் நடத்தப்படும்: ட்ரம்ப்
10 Mar 2026வாஷிங்டன், ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை முடக்க நினைத்தால் இதுவரை தாக்கப்பட்டதைவிட ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்
-
வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்படாது: தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதி
10 Mar 2026கொல்கத்தா, தகுதிவாய்ந்த எந்தவொரு வாக்காளரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு
10 Mar 2026மும்பை, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்டன.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவர்த்தனகிரியில் பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரம்.
- திருவாரூர் தியாகராஜர் புறப்பாடு.


