முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜனவரி 2026      இந்தியா
Modi

அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 6 ஆயிரத்து 957 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலை மேம்பாலப்பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், 2 அம்ரித் பாரத் ரயில்களையும் தொடங்கி வைத்தார்.

86 கி.மீ நீளமுள்ள காசிரங்கா மேம்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும். மேலும், காணொளி காட்சி மூலம் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களான கவுகாத்தி (காமாக்யா)- ரோஹ்தக் அம்ரித் பாரத் விரைவு ரயில், திப்ருகர்- லக்னோ (கோமதி நகர்) அம்ரித் பாரத் விரைவு ரயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

அசாமில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சியே பிரதானம் என்ற பா.ஜ.கவின் தாரக மந்திரத்தை வலுப்படுத்தியுள்ளன. அசாமின் காசிரங்கா உயர்மட்டப் பாலம் வெள்ளக் காலங்களில் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்க உதவும். நிலங்களை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதன் மூலம் பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.

அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன. வெறும் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும், சில வாக்குகளைப் பெறுவதற்காகவும் அவர்கள் உங்கள் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஊடுருவல்காரர்கள் அசாம் மற்றும் நாட்டிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். பல தசாப்தங்களாக அசாமில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீங்கள் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நாட்டில் அனைவரின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பா.ஜ.க மீதான நாட்டின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் பெரிய வெற்றியை தந்தனர். மராட்டியம் மற்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க சாதனை படைத்தது.

எதிர்மறை அரசியல் செய்தியை வழங்குவதால் காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மும்பையில் பிறந்திருந்தாலும் இன்று அந்த கட்சியை மும்பையில் நடக்கும் தேர்தலில் 4-வது அல்லது 5-வது இடத்தில் தான் பார்க்க முடிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் இல்லாததால் அது நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இவ்வாறு மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து