முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்

செவ்வாய்க்கிழமை, 20 ஜனவரி 2026      இந்தியா
Nitin-Naveen-2026-01-20

புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பா.ஜ.க. தேசிய தலைவராக தற்போதுள்ள மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, கடந்த 2020, ஜனவரியில் பதவியேற்றதைத் தொடர்ந்து, ஜெ.பி. நட்டாவின் மூன்றாண்டு பதவிக் காலம் ஏற்கெனவே நிறைவுற்ற பிறகும் கட்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அப்பதவியில் நீடித்து வந்தார்.

இதையடுத்து, பா.ஜ.க.வின் புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஜன. 19) மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நிதின் நவீனைத் தவிர வேறு எவரும் அக்கட்சியின் உச்சபட்ச பதவிக்கான தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, நிதின் நவீனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐந்து முறை பீகார் சட்டப்பேரவை உறுப்பினரான நிதின் நவீன் பா.ஜ.க. தேசிய தலைவராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முக்கிய மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.க. தனது செல்வாக்கை மேலும் விரிவுபடுத்த முயலும் இந்த நேரத்தில், கட்சியின் உயரிய பதவியை வகிக்கும் மிக இளைய தலைவர் இவர் ஆவார். பா.ஜ.க. முந்தைய தலைவர் ஜெ.பி. நட்டா தனது பொறுப்புகளை புதிய தலைவர் நிதின் நவீனிடம் ஒப்படைத்தார்.

பா.ஜ.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்பட கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். முன்னதாக, நேற்று காலை பா.ஜ.க. புதிய தலைவராகப் பதவியேற்ற நிதின் நவீன், டெல்லியில் உள்ள பல்வேறு கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டார். டெல்லி மாநிலத் தலைவர் வீரேந்திர சச்தேவா, தில்லி அமைச்சர்களான பர்வேஷ் சாஹிப் சிங், மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களுடன் சென்ற நிதின் நவீன் முதலில் ஜண்டேவாலா கோயிலில் பிரார்த்தனை செய்ததாக பா.ஜ.க. அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து