முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      தமிழகம்      அரசியல்
Ramadoss 2023-07-28

சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அந்தவகையில், அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. 

தற்போது வரை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.கா., புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல் கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று மாலை நிர்வாக குழு கூட்டத்தை ராமதாஸ் கூட்டினார். தே.ஜ.க. கூட்டணியில் அன்புமணி இணைந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து