முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்

புதன்கிழமை, 21 ஜனவரி 2026      உலகம்
Trump 2023-04-13

ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த நிலையில், ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த அமைதி வாரியத்தில் துருக்கி இடம்பெற்றிருப்பது குறித்து இஸ்ரேல் அரசு அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், தற்போது நெதன்யாகு அமைதி வாரியத்தில் இணைய சம்மதித்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இதுவரை இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, வியட்நாம், கஜகஸ்தான், ஹங்கேரி, அர்ஜென்டினா மற்றும் பெலாரஸ் ஆகிய 8 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. அமைதி வாரியத்தைப் பொறுத்தவரை இதில் பெரும்பகுதி அதிகாரம் அமெரிக்க அதிபரான ட்ரம்ப்பிடமே இருக்கும் என்றும், இந்த வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக இணைய ஒரு பில்லியன் டாலர் நிதியை செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நாளை நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில், அமைதி வாரியம் குறித்த கூடுதல் விவரங்களை ட்ரம்ப் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து